கடந்த 17ம் திகதி இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பி.எச்.பியசேனவின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
அம்பாறை அக்ரைப்பற்றில் உள்ள அவரது வீட்டில் நேற்றைய தினம் இறுதிக் கிரியை இடம்பெற்றது. அரசியல் கட்சிகளின் தலைவர், ஆலய நிர்வாகத்தினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தந்தவர்கள், இறுதிக் கிரியையில் பங்கெடுத்தனர்.
அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டத்தைத் தொடர்ந்து, நேற்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு இந்துமயானத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பி.எச்.பியசேனவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.