உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா விளையாடும் முதல் போட்டி

0
93

லயனல் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி நாளை (23) பனாமாவுடன் மோதவுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சம்பியனான பின்னர், ஆர்ஜென்டீன அணி பங்குபற்றும் முதலாவது போட்டி இதுவாகும்.

ஆர்ஜென்டீனாவின் தலைவர் புவனோஸ் அயர்ஸில் இப்போட்டி நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. 

63,000 டிக்கெட்களை வாங்குவதற்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.