2023 தேசிய புத்தரிசி விழாவை முன்னிட்டு, முல்லைத்தீவில், புத்தரிசி வழங்கல் நிகழ்வு

0
203

‘மாரி மழை பொழியட்டும் வயல் நிலங்கள் செழிக்கட்டும்’ என்னும் வாசகத்திற்கு இணங்க, 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய புத்தரிசி விழா இடம்பெறவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு, புத்தரிசி வழங்கும் நிகழ்வு, நேற்று, முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள, கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், பிரதம அதிதியாக பங்கேற்று, புத்தரிசியையும் வழங்கி, நிகழ்வை ஆரம்பித்தார்.

‘புத்தரிசியினால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்’ 2023, ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி, ஜய ஸ்ரீமஹா போதியில் வாசம் செய்யும் புத்தபகவானை ஆராதிப்பதற்கு, எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர், உங்களுக்கு அருகில் உள்ள கமநல சேவைகள் நிலையத்திற்கு, புத்தரிசியை எடுத்து வந்து வழங்கவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.