யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

0
209

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரனும், சிறப்பு விருந்தினராக உதவிக் கல்விப் பணிப்பாளர் லதிஸ்கரேஸ் விக்ரரும், கௌரவ விருந்தினராக பதில் நீதிபதி சோ.தேவராஜூம் கலந்து கொண்டனர்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் விருந்தினர்கள் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு, மாணவர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.