மன்னார் – கள்ளியடி அ.த.க.பாடசாலையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு, பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
பல வருடங்களுக்கு பின்னர் கள்ளியடி அ.த.க. பாடசாலையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் டெஸ்மன் டினுசாந்துக்கு தெய்வமணி அறக்கட்டளையால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாகவும், சிறப்பான புள்ளிகளை பெற்ற மேலும் இரு மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மாணவர்களின் சாதனைக்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பாக ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக மடு வலயக் கல்விப் பணிப்பாளர் -கல்வி அபிவிருத்தி வாசுகி சுதாகரும், சிறப்பு விருந்தினர்களாக மடு வலய ஆரம்ப கல்வி அதிகாரி எஸ்.செல்ரன் யூடிற், மாந்தை மேற்கு கோட்டக் கல்வி அதிகாரி ஜீ.அந்தோனிப்பிள்ளை மற்றும் கள்ளியடி கற்பக விநாயகர் ஆலய தலைவர், தெய்வமணி அறக்கட்டளை நிறுவனர் வி.முத்துலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், கள்ளியடி முகாம் இராணுவ தளபதி மற்றும் பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


