ஐ.எம்.எவ் திட்ட பணியை ரணிலிடம் ஒப்படைக்க பஸிலே பரிந்துரைத்தார்!

0
139

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்குமாறு பஸில் ராஜபக்ஷவே பரிந்துரை செய்தார் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் எடுக்கப்பட்டது.

வியத்கமவில் இருந்த சிலர் ஜனாதிபதியின் காலை இழுத்து விழுத்தும் செயலையே செய்தனர்.

உண்மையில், ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இதனை செய்யக்கூடியவர் என்று பஸில்ராஜபக்ஷ அவரைப் பரிந்துரை செய்தார் எனவும் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.