Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்ளக விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களிடம் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, “என்னை மாதிரியானவர்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பு கிடைப்பது கடினம். அந்த சந்தோஷத்தோடு நெஞ்சில் வாள் சுமந்து வந்திருக்கிறேன்.பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை. முதல் நாள் படம் பார்க்க வேண்டும் என தஞ்சாவூர் சென்று ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டேன். நான் முதல் பாகத்தை பார்க்காதது பெரிய ஆச்சர்யமான செய்தி. முதல் பாகத்தில் என்ன இருந்தது என தெரியாது இரண்டாவது பாகத்தில் என்ன இருக்க போகிறது என தெரியாது , இந்த படத்தில் நான் இருப்பது தான் என்னுடைய சந்தோஷம் பெருமை என நினைக்கின்றேன்.முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சின்ன கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக நடித்திருந்தேன் என கூறினார்கள். எல்லா படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். வரலாற்று படத்திற்கு மட்டுமல்லாமல் சராசரி படத்திற்கு கூட வரலாறு படைக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்..