தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

0
197

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் நேற்று வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று சூம் தொழில்நுட்பத்தின் ஊடா சந்திப்பு இடம்பெறவிருந்தபோதிலும், அதற்கு தேசிய விளையாட்டு சபையின் அங்கத்தவர்கள் எவரும் பங்குகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இவ்விடயம் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம் எனவும், தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என சுதத் சந்திரசேகர அர்ஜூன ரணதுங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.