அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

0
192
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24ஆம் திகதி காலமானார். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர்.இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து கூறியுள்ளார்.