ஒரு இலட்சம் செங்குரங்குகள் சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன என விவசாய அமைச்சை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டிலிலுள்ள குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக, அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குரங்குப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.