மகனின் தாக்குதலுக்குள்ளாகி தந்தை உயிரிழப்பு

0
130

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் ஸ்ரீவாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்ததுடன் தாய் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது இடைநடுவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 64 வயதுடைய பிச்சைமுத்து இராமசாமி என்று இனங்காணப்பட்டதாக தெரிவித்த தர்மபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.