நிதி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

0
111
கட்டாரில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
6 இலட்சம் ரூபா பணம் அவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான குறித்த இரு பெண்களும் ஊர்காவற்றுறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
முறைப்பாட்டாளர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்கேகநபர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுள்ள அதேநேரம், கடவுச்சீட்டையும் சந்தேகநபர்களிடம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.