Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் முறையான மருந்து சீட்டு முறைமை இன்மையால் தவறான மருந்து விநியோகம் காரணமாக கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 07 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.குறித்த பெண் குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள், அச்சிடப்பட்ட காகிதத்தில் மருந்து எழுதி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெற்றோர் வைத்தியசாலையிலுள்ள மருந்தகத்தில் மருந்தைப் பெற்றதாகவும், வீடு திரும்பிய பின்னர் குழந்தை மருந்தை உட்கொண்டதாகவும், இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பலவீனமடைந்ததாகவும் கூறப்படுகிறது.இரண்டாவது தடவையாக வைத்தியசாலைக்கு சென்ற குழந்தைக்கு வேறு அறிகுறிகள் தென்பட்டதால், அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, பிள்ளைக்கு முதியவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் அச்சிடப்பட்ட தாளில் ஏற்கனவே வயோதிப நோயாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருந்த மருந்துகளை குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் எழுதி வைத்திருந்ததை வைத்தியசாலை கண்டறிந்துள்ளது.எவ்வாறாயினும், மயக்கமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் காகித தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே மருந்து சீட்டு தாள்களை பயன்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே குழந்தைக்கு தவறான மருந்து மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.