Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையால் கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க பிரதேச செயலகத்திற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.இன்று இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கையின் கீழ் அந்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக சேனாதீர தெரிவித்தார்.மழை அதிகரிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.