பெண் ஒருவர் சடலமாக மீட்பு

0
142

களுத்துறை வடக்கில் வீடொன்றின் பின்புறம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு கெலிடோ வீதியை வசிப்பிடமாகக் கொண்ட விக்கிரமராட்சி பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் கிடப்பதைப் பார்த்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.