இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய மனித வளத் திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரியமொழி ஆற்றலைக்கொண்டு இணையத் தளத்தின் மூலம் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத் தொழிற் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.