புத்தளத்தில் வீடொன்றிற்கு தீ வைப்பு: விசாரணைகள் ஆரம்பம்

0
170

புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வண்ணாத்திவில்லு 13ம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் அடையாளம் தெரியாத சிலரால் வீட்டிற்குத் தீவைக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேன்போது வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஒரு வார காலத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் சிலரால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.குறித்த வீடு தீப்பிடித்துக் கொண்டிருந்த போது வீட்டில் 5 பேர் இருந்ததாகவும், தீ பரவியதும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்

இதன்போது தீயினால் வீட்டில் இருந்த பல பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.இதன்போது சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டை பார்வையிட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.