அம்பாறை நற்பட்டிமுனையில் மக்கள் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் அட்டகாசம்

0
91

அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பட்டிமுனையில், இன்று அதிகாலை திடீரென மக்கள் குடியிருப்புக்குள் உள்நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தின.

குடியிருப்பாளர்களின் வீட்டு மதில்களை இடித்தழித்ததுடன், பயன்தரு மரங்களையும் துவம்சம் செய்தன. நற்பட்டிமுனையில் சமீபகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கிராமத்திற்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்டுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.