ஷாருக் கானின் ‘ஜவான்’ படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு

0
155

‘பதான்’ படத்தின் மூலம் மீண்டும் சாதனை படைத்திருக்கும் ‘பொலிவுட் பாட்ஷா’ ஷாருக் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜவான்’ படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ, ஹிந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக் கான், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே, தளபதி விஜய், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜி. ஆர். விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மே மாதம் 12ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நிறைவடையாததால், இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் திகதியன்று பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.