நுவரெலியா வைத்தியசாலையில் 10 பேருக்கு பகுதியளவு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோரியுள்ளார்

0
144
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சையின் பின்னர் 10 பேருக்கு பகுதியளவு கண் பார்வை பறிபோன சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அவசர அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.சம்பந்தப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளர்களின் கண்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துகள், அதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஜனாதிபதி சுகாதார அமைச்சிடம் கேட்டுள்ளார்.இது போன்ற பாரதூரமான சுகாதார சிக்கல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் ஜனாதிபதி சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.