நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார்இ நடிகை ரம்யா கிருஷ்ணன்இ நடிகர்கள் யோகிபாபுஇ வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169 ஆவது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ரஜினியின் 170ஆவது படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.