சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது

0
199

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தையொட்டி மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வூட்டல் செயலமர்வும் இன்று மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபை
மண்டபத்தில் நடைபெற்றது.
நகர சபையின் செலாளர் எம்எச்எம். ஹமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்.
நகர சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன்
விழிப்புணர்வுச் செயலமர்வொன்றும் நடாத்தப்பட்டது.
நகர சபையின் ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
புகையிலைப் பாவனை மற்றும் புகைத்தல் போன்ற செயற்பாடுகளினால் உடற்சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.