வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின் இணைப்பு துண்டிப்பு!

0
158

வவுனியாவில் பல மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு கடமையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரிடம் கேட்ட போது, பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்கு முன் மின்கட்டண நிலுவை செலுத்தி மீள் மின்னிணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் நேற்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.