லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 61 வயதான நபர் ஒருவர், காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி பயணித்த கப்பல் ஒன்று காலி துறைமுகத்திற்கு பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வந்த போது, குறித்த நபர் துறைமுகத்தில் இறங்க முற்பட்ட வேளையில் கடலில் தவறி விழுந்ததாகவும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.