இலங்கையில் சுனாமி எச்சரிக்கை மையத்தின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல்

0
167

விரிவான அணு சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் கலாநிதி ரொபர்ட் ஃபிலாய்ட், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையில் சுனாமி எச்சரிக்கை மையத்தின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த ரொபர்ட் ஃபிலாய்ட், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார்.