மனைவி விகாரைக்கு சென்றிருந்த போது வீட்டில் இடம்பெற்ற பயங்கரம்!

0
122

மத்துரட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலபட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டினுள் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலபட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி அருகில் உள்ள விகாரைக்கு சென்றிருந்த போது இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் திறந்து கிடந்ததை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அயலவர் ஒருவர் இறந்தவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் சென்று பார்த்த போது உயிரிழந்தவர் வீட்டில் சடலமாக கிடந்துள்ள நிலையில், முகம் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் இழுத்து கலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துரட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.