ஏரியில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

0
127

தெஹியத்தகண்டி ஹெனானிகல தெற்கு ஏரியில் இன்று காலை நீராடச் சென்ற, ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 17 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

தெஹியத்தகண்டி ஹெனானிகல பிரதேசத்திற்கு நேற்று பேருந்தில் 50 பேர் கொண்ட குழு சென்றதாகவும், அதில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.