கொழும்பில் உள்ள இல்லத்தில் வைத்து, இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்று மாலை, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து, இன்று உரையாற்ற இருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
நாளை காலை 10.00 மணிக்கு, யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையலேயே, இன்று காலை, அவருடைய இல்லத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், கொழும்பில் இருந்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், இன்று மாலை, கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது, 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.