வடக்கு கிழக்கில் இருந்து குணம காட்டு வழிப்பாதை ஊடாக கதிர்காம திருத்தலத்திற்கு பாத யாத்திரிரை செல்லும் அடியார்களுக்கு சுகாதாரமான குடிநீரினை வழங்குவதற்காக அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கதிர்காம பாத யாத்திரியர்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை முன்னெடுத்து வரும் அம்பாரை மாவட்ட சேவற்கொடியோம் மற்றும் அம்பாரை மாவட்ட சிவதொண்டர் ஆகிய அமைப்புகளுக்கு இந் நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் லாகுகல பிரதேச செயலகத்திற்கும் 400 லீட்டர் டீசலைக் கொள்வனவுக்கான நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரின் ஒருங்கிணைப்பில் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்ளான நவநீதராஜ், ஜெயக்காந், திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் கட்சியின் ஆதரவாளர்கள் சேவற்கொடியோன் மற்றும் சிவதொண்டர் ஆகிய அமைப்புகளின் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.