மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுவதீசன் என்பவர் மீது, கடந்த 30 ஆம் திகதி இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர்களை மன்னார் பொலிஸாரிடம் அடையாளம் காட்டிய போதும் இதுவரை குறித்த சந்தேக நபர்களை மன்னார் பொலிஸார் கைது செய்யவில்லை என, மன்னார் முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் 3 பேரையும் இதுவரை மன்னார் பொலிஸார் கைது செய்யாமை குறித்து, தாக்குதலுக்கு உள்ளான மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.