கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் வளங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து வைத்த அமைச்சர் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொலிசார் கடற்ப்படையினர் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.