அம்பாறை நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதிகள், நாற்சந்திகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அண்மைக்காலமாக சட்டவிரோதமான மீன் விற்பனை நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், வீதியில் நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படலாம் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நிந்தவூர் பிரதேச சபை, நிந்தவூர் பொலிஸ் நிலையம் ஆகியன ஒன்றினைந்து இவ்வாறான சட்டவிரோத மீன் விற்பனை
வியாபார நடவடிக்கை இடம்பெறும் இடங்களை இன்று அடையாளப்படுத்தி எச்சரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் அங்கு காட்சிப்படுத்தின.