கொட்டாவை நகருக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், ஆய்வக ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சுட வருவதும், அந்த நபரை நோக்கிச் சுடுவதும் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் இருவரும் தப்பியோடியுள்ளனர்.
காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அங்கு காயமடைந்த நபர் அங்கு உயிரிழந்துள்ளதுடன், அவர் 34 வயதான மத்தேகொட பகுதியைச் சேர்ந்த மிஹிரான் பிரபாத் என தெரியவந்துள்ளது.
அவர் மாதிரிகளை எடுத்துச் செல்லும் மருத்துவ ஆய்வகத்தின் ஊழியர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.