நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை!

0
184

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையன நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்பும் அந்த சலுகைகளின் நலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களினது விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாத நிறுவனங்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.