இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: நந்தலால் வீரசிங்க

0
98

கைத்தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல, இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கைத்தொழில் துறையானது ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கு நாட்டின் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அத்துடன் சர்வதேச சந்தைகளின் இயக்கவியலுக்கு ஏற்ப தேசிய கைத்தொழில் அபிவிருத்தி மூலோபாயத்தை மீள்பரிசீலனை செய்வது மிகவும் அவசியமானது என நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.