சீனாவில் உடற்பயிற்சி கூடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி!

0
207

வடக்கு, கிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பாடசாலை உடற்பயிற்சி கூடத்தின் கொன்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் போது 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

அவர்களில் 4 பேர் காயங்களுமடன் தப்பியுள்ளனர்.

மழைநீரை உறிஞ்சும் வகையில் பெர்லைட் என்ற கனிமப் கட்டுமானப் பொருள் கூரையின் மீது குவிக்கப்பட்டிருந்ததே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.