காட்டு யானைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இக்கிண்ணியாகலை கெஹெல்எல்ல பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை பரகஹகலே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஹந்துங்கொட , ஹிம்பிலியாகொட பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 69 வயதுடைய நபரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.