பாம்புகளை பிடித்து காட்டில் விடுவிக்கும் நபர் !

0
82
பண்டாரவளையை சேர்ந்த சுபுன் லக்‌ஷான் பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காடுகளில் விடுவிக்கும் பணியை கடந்த 10 வருடங்களுக்கு மேல் முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றார்.வீடுகள், தோட்டங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள இடங்களில் வந்து தஞ்சமடைந்து வாழும் பாம்புகளை இவ்வாறு பிடித்து காடுகளில் பாதுகாப்பாக விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுவரை 3000 பாம்புகளுக்கு மேல் பிடித்து காடுகளில் தாம் விடுவித்துள்ளதாகவும் பாம்புகளை மக்கள் அடித்து கொல்வதால் இந்தப் பணியை தாம் ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.பாம்புகளை தாம் அதிகம் நேசிப்பதாகவும் பாம்புகளை பிடிப்பதில் தமக்கு எவ்வித பயமும் இல்லை என்றும் சுபுன் லக்‌ஷான் தெரிவித்துள்ளார்.