காட்டு யானை தாக்கி இருவர் பலி !

0
91
மொனராகலை கோணகங்கார பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை நேர்ந்த இந்த அனர்த்தத்தில் 63 வயதான பெண்ணொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விவசாய காணியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு குறித்த பெண் இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில் காட்டு யானையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி குறித்த பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.புத்தல கதிர்காமம் பிரதான வீதியை மறித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கந்தளாய் – பேரமடுவ பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காக ஒருவர் உயிரிழந்துள்ளார்.தமது தோட்டத்தில் பயிர்களுக்கு சேதம் விளைவித்த காட்டு யானையை குறித்த நபர் விரட்ட முயற்சித்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.சம்பவத்தில் 64 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.