அமெரிக்கா-ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மொய் தீவில் பயங்கர காட்டுத்தீ பரவியது.
அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத்தீ, மொய் தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது.
இந்தநிலையில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போன நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கிரையாகின.
கடந்த செவ்வாய்கிழமை இரவு தொடங்கிய காட்டுத் தீ, வரண்ட வானிலை மற்றும் சூறாவளிக் காற்றால் மொய் தீவு முழுவதையும் மோசமாக பாதித்துள்ளது.