மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பணிப்புரியும் கால்நடை வைத்தியர்கள் அக்கறையின்றி செயற்படுகின்றமையால் மலையகத்தில் அதிகளவிலான கால்நடைகள் உயிரிழப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விசேட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,
நுவரெலியா – நோரவுட் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற கால்நடை வைத்தியசாலையில் நீண்ட காலமாக கால்நடை வைத்தியர்கள் இன்மையால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு திடீர் சுகயீனம் ஏற்படுகின்ற போது அப்பிரதேச மக்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியரை நாட வேண்டி இருக்கின்றது.
இதேவேளை ஹட்டன் பகுதிகளில் உள்ள வைத்தியருக்கு பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பகுதிகளுக்கு சென்று அவருடைய சேவையினை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் கால்நடை வளர்ப்பாளர்கள் இது தொடர்பில் என்னிடம் முன்னவைத்த கோரிக்கைக்கு அமைய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கலந்துரையாடி பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா போன்ற கால்நடை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
இருந்த போதிலும் வெகு விரைவில் குறித்த இரண்டு வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.