அதிகரித்துவரும் வாகனங்களின் உதிரிபாகங்கள் களவாடல்

0
71
கொழும்பு நகரில் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடி உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.மோட்டர்சைக்கிள் , முச்சக்கர வண்டி, கார் போன்றவற்றின் கண்ணாடிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படுகின்றமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடு பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.