30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீனாவில் ஐபோன் பயன்படுத்த தடை

உலகின் முன்னணி கையடக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

 இதன் முக்கிய தயாரிப்பான ஐபோன், ஐபேட் போன்றவற்றிற்கு உலகின் பல நாடுகளிலும் அதிகம் புகழ் பெற்றுள்ளன.

 சீனாவிலும் இந்த ஐபோனை பலர் விரும்பி பயன்படுத்துகின்றனர். அதன் புதிய தயாரிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான மோகத்தை குறைத்து இணைய பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது.

அதன்படி ஐபோன் மற்றும் வெளிநாட்டு முத்திரை உள்ள கருவிகளை அரசாங்க ஊழியர்கள் தங்களது பணியின் போது பயன்படுத்தக் கூடாது என சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

சீனாவின் டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையின் எதிரொலி எனவும் இது கருதப்படுகிறது. 

இது குறித்து சீன அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க விரும்பவில்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles