மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெயர் பலகை இன்று திறந்து வைக்கப்பட்டது.

0
276

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்லூரி நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்லூரியின் பெயர் பலகை மற்றும் 150 வருட நினைவு சின்னம் பொறிக்கப்பட்ட பெயர் பலகை என்பன இன்று திறந்து வைக்கப்பட்டன.
கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அருட்தந்தை போல் சற்குண நாயகம், அருட்தந்தை சகாய நாதன் கல்லூரி அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் மற்றும்
முன்னாள் கல்லூரி அதிபர்கள் கல்லூரி பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.