16-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தசுன் ஷானக தலைமையில் இலங்கை அணியும், ரோகித் சர்மா தலைமையில் இந்தியா அணியும் மோதவுள்ளன.
நடப்பு செம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இலங்கை அணி, இந்திய அணியை வீழ்த்தி 7-வது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை வெல்லுமா என்று ஆவலுடன் இரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.