அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கிராமத்திற்குள் உள் நுழைந்த காட்டு யானை பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்து
சென்றுள்ளது.
சேனைக்குடியிருப்பு கலைமகள் வீதியில் இன்று அதிகாலை 12 மணியளவில் புகுந்த காட்டு யானை 2 வீடுகளின் சுற்றுமதில்கள், யன்னல் கண்ணாடி என்பவற்றை உடைத்ததுடன்
வாழை மற்றும் பப்பாசி மரங்களையும் அழித்துள்ளது.
பொதுமக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் கூச்சலிட்டு ஆற்றுப்பகுதியை நோக்கி யானையை துரத்தினர்.
இரவு நேரங்களில் அச்சத்துடனேயே வீடுகளில் தங்கவேண்டிய துர்ப்பாக்கிய
நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை கல்முனை சேனைக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்து யானையொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.