மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து தட்டுப்பாடு

0
132
மனநோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. அங்கொட தேசிய மனநல நிறுவனம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள மனநல சிகிச்சைப் பிரிவுகளில் மனநோய்களுக்குப் பயன்படுத்தப்படும்Wafarin, Amiodarone, Amisulpride, lithium SR, Orciprenaline உள்ளிட்ட ஐந்து வகைக்கு மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதில் மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தனியார் பார்மசிகளில் இருந்து மருந்துகளை பெற்று வருமாறு நோயாளிகளின் உறவினர்களுக்கு தெரிவித்தாலும் பார்மசிகளிலும் குறித்த மருந்துகள் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் .