அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வரலாற்று பழமை கொண்ட விநாயகபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள
நிலையில், இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
கணபதி ஹோமம், வேதாகம மந்திர பூஜைகள் இடம்பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆலய நிர்வாகத்தினரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேயவிக்கிர பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பின்னர், விநாயகபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வரலாற்றை எடுத்துக் காட்டும் நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் வே.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.