ஐதராபாத்: தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரனிகி’ படத்தை தொடர்ந்து இயக்குனர் விவேக் ஆத்ரேயா, நானி மீண்டும் இணையும் படத்துக்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிவிவி என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கின்றனர். முரட்டுத்தனமான தோற்றத்தில் நானி நடிக்கிறார். அவரது ஜோடியாக பிரியங்கா அருள் மோகன், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றனர். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. நானியின் ‘ஹேய் நான்னா’ படத்தை தொடர்ந்து இப்படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுகிறது.
நானி நடிக்கும் சூர்யாவின் சனிக்கிழமை
0
116