குருநாகலிலுள்ள ராஜ்யசபா மண்டபத்தை அழித்த விவகாரத்தில் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட குருநாகல் மாநகர சபையில் பணிபுரியும் நபர் , பௌத்த விவகாரங்களுக்கான மேலதிக ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு அது பற்றிய செய்தியை மறுத்துள்ளது.
புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை தொடர்பு கொண்ட போது, இந்த நியமனம் குறித்து எனக்குத் தெரியாது.எனது செயலாளரும் யாரையும் நியமிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
அந்த பதவிக்கு தான் யாரையும் நியமிக்கவில்லை என அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரனவும் தெரிவித்துள்ளார். “நாங்கள் புதிய ஆணையாளரை நியமிக்கவில்லை. பொது நிர்வாக அமைச்சின் மூலம் ஏதேனும் நியமனம் செய்யப்பட்டதா என்பதை நாங்கள் விசாரிப்போம்” என்று அவர் கூறினார்.
குருநாகல் மாநகர சபையில் கடமையாற்றும் இந்த உத்தியோகத்தர் ராஜசபை மண்டபத்தை அழித்தமை தொடர்பில் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிக்கு எதிராக குருநாகல் நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.